எங்களை பற்றி

விடியல் இராசிங்காபுரம்-625528, தேனி மாவட்டம், தமிழ்நாடு

விடியல் இராசிங்காபுரம்-625528, தேனி மாவட்டம், தமிழ்நாடு


விடியல் 1986-ல் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் வலிமையோடு வாழுகின்ற மாதிரி கிராம வாழ்க்கையை உருவாக்குவது என்னும் தொலைநோக்கு பார்வையுடனும், 'நீடித்த நிலைத்த சமுதாய மாற்றத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து, விழிப்புணர்வு கல்வி வழங்கி தங்களது பிரச்சனைகளுக்கான தீர்வை, தாங்களே கண்டறியும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தல் என்னும் குறிக்கோளுடன் தமிழ்நாடு, தேனி மாவட்டம், போடி பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு சமூக மாற்று நிறுவனம்.
1996-ம் ஆண்டு முதல் பெண்களை சுய உதவிக் குழுக்களாகவும், கூட்டமைப்புகளாகவும் ஒருங்கிணைத்து சேமிப்பு, தொழில் கடன்கள் மூலம் அவர்களது பொருளாதார மேம்பாட்டையும், 2007-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் ஆஃப் லேர்னிங் கனடா நிறுவனத்துடன் இணைந்து கடனுடன் இணைந்து மொபைல் போனில் ஆடுவளர்ப்பு தொடர்பான வாய்ஸ்மெயில் கல்வியை ஒத்தக் கருத்துகளுடைய கூட்டாளிகளுடன் இணைந்து 'மொபைல் போன்' என்ற பேசுவற்காக பயன்படும் தகவல் தொழில்நுட்ப சாதனத்தை கல்விக் கற்றுக் கொடுக்கும் சாதனமாக மாற்றி, இதுநாள் வரை 45000 பெண்களும், விவசாயிகளும்  பயன்பெறும் வகையில் செயல்படுத்தியுள்ளோம்.
விடியல் நிறுவனத்தின் தொலைதூரக் கல்வித் தகவல்களை, வாய்ஸ்மெயில்களாகவும், வீடியோ படக்காட்சிகள், புத்தகங்கள் மூலமாக வழங்கிய தகவல்களை அனைத்து மக்களும் படித்து பயன்பெற வேண்டி திறந்த நிலை கல்வி வளங்களாக(OER) வழங்க வாழ்நாள் கல்வித் திட்ட கூட்டாளிகளுடன் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை விவசாயமும், விவசாயியும் பயன்பெறும் வகையில் அளித்துள்ளோம்.  இது இரு வழி கற்றல் முறையாக தங்களது அனுபவங்களையும், தேவைகளையும் பகிர்ந்து அனைவரும் பயன்பெற கனடாவில் உள்ள காமன்வெல்த் ஆஃப் லேர்னிங், கனடா அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.