வாழ்நாள் கல்வி

உற்பத்தியாளர் கம்பெனியின் உறுப்பினர்கள்

உற்பத்தியாளர் கம்பெனியின் உறுப்பினர்கள்

உற்பத்தியாளர் கம்பெனியின் உறுப்பினர்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


உற்பத்தியாளர் கம்பெனியின் உறுப்பினர்கள் முன்னுரை

'சிறுதுளி பெருவெள்ளம்' இது பழமொழி. கம்பெனி என்பது பல உறுப்பினர்களைக் கொண்டதாகும் இது மாதிரியான கம்பெனிகளில் உறுப்பினராகும் வழி முறைகள் பற்றியும் உறுப்பினர்கள் ஆன பின்பு அவர்களின் பொறுப்புகளும் கடமைகளும் பற்றியும் இந்தப் பாடத்திட்டத்தில் பார்க்கலாம்.

 

உறுப்பினர் என்பதன் பொருளும், இலக்கணமும்

கம்பெனி சட்டத்தின் 41 -வது பிரிவு உறுப்பினர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்

1.    கம்பெனியின் அமைப்பு சாசனத்தில் கையொப்பமிட்டவர்கள்

2.    கம்பெனியில் உறுப்பினராவதற்கு எழுத்து மூலமாக ஒப்புக்கொண்டவர்கள் இவர்களின் பெயர்கள் பதிவேட்டிலும் இருக்க வேண்டும்.

3.    கம்பெனியில் சாதாரண பங்குகளை வாங்கியிருப்பவர் ஆக மூன்று வகையான உறுப்பினர் ஆவர்.

 

பங்குதாரர் விளக்கம்

உறுப்பினர் மற்றும் பங்குதாரர் என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் இரண்டும் ;வேறானது ஒரு கம்பெனியின் பங்குதாரர்கள் உறுப்பினராகவோ, உறுப்பினர் பங்குதாரராகவோ இருக்க வேண்டுடியது இல்லை. பங்கு மூலதனம் இல்லாத கம்பெனியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினரை அந்த கம்பெனியின் பங்குதாரராக கருத முடியாது. ஒரு கம்பெனியின் பங்குரிமை ஆணையை வைத்திருப்பவர் அக்கம்பெனியின் பங்குதாரர் ஆவர். ஆனால் அவரை கம்பெனியின் உறுப்பினராக சட்டம் கருதுவது இல்லை. கம்பெனியின் உறுப்பினர் ஒருவர் இறந்து போனால் அவர் பெயரில் உள்ள பங்குகளின் உரிமை சட்டப்படி அவரது வாரிசுதாரர்களுக்கு சேரும். அவர் கம்பெனியின் பங்குதாரர் ஆக முடியும் ஆனால் உறுப்பினர் ஆக முடியாது அவர் கம்பெனியின் பதிவேடுகளில் தன் பெயரை பதிவு செய்த பின்னரே உறுப்பினராக கருத முடியும்

 

கம்பெனி உறுப்பினராகும் வழிகள்

1. கம்பெனி அமைப்பு சானத்தில் ஒப்புதல் கையொப்பம் இட வேண்டும்

2. பங்குகோரி விண்ணபித்து ஒதுக்கீடு பெறுதல்

3. ஒரு உறுப்பினர்களிடமிருந்து அவர் பெயரிலுள்ள பங்குகளை தன் பெயருக்கு மாற்றிக் கொடுக்க செய்தல்

4. பங்குகள் மரபு வழி மாற்றம் மூலம் ஒருவருக்கு கிடைத்தவுடன் தன் பெயரில் மாற்றி வாங்கிக் கொள்ளுதல்

5. இயக்குநராக பொறுப்பேற்றபின் தகுதி பங்குகளை பெற்றுக் கொள்ளுதல்

6. தனது பெயர் உறுப்பினர் பதிவேட்டில் இருப்பரை தொடர்ந்து செயலாலும் சொல்லாலும் தான் ஒரு உறுப்பினர் என மற்றவர் நம்பும்படி நடந்து கொள்ளுதல்

 

உறுப்பினர்களின் உரிமைகள்

1. கம்பெனிச்சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள்

2. கம்பெனிச்சட்டம் ஆணைகள் வழங்கும் உரிமைகள்

3. பொதுசட்டம் வழங்கியுள்ள உரிமைகள்

 

உறுப்பினர்களின் பொறுப்புகள்

உறுப்பினர்கர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குத்தொகை முறையாக செலுத்த வேண்டும்.

உறுப்பினர் கம்பெனியின் அமைப்பு சாசனம் செயல்முறை விதிகள் ஆகிய இரண்டுக்கும் கட்டுப்பட்டவர் ஆவார்.

கம்பெனி செய்யும் தொழில்களில் பங்கேற்றல், விற்றல், வாங்குதல்

ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப செயல்படுதல்

கம்பெனியின் இரகசியங்களை பாதுகாத்தல்

கம்பெனி செயல்படுத்தும் புதிய தொழில் திட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றல்

வாரிசுதாரர் நியமனம் செய்தல்

 

உற்பத்தியாளர் கம்பெனியின் உறுப்பினர்கள் முடிவுரை

இந்தப் பாடத்திட்டத்தில்; கண்டுள்ளபடி ஒரு உறுப்பினர் தன் பொறுப்பை உணர்ந்து தன் கடமையை செய்து வந்தால் கம்பெனி மென்மேலும் வளர்ந்து வளம் பெறும் கம்பெனியின் உறுப்பினர்களும் பயன் அடைவர்

' கடமைகளை செய்வோம்

கண்ணியமாக வாழ்வோம்'